முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் விடுவிக்கப்பட்டார்
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன உள்ளிட்ட மூவரை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை, ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உரிய ஆதாரங்கள்
போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், விசாரணைகளின் பின்னர், சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்து பணிப்பாளர் கீர்த்தி சமரசிங்க திஸாநாயக்க, ஜாதிக சவிய - கமநெகும திட்டத்தின் புத்தளம் பணிப்பாளர் சுதத் சுபசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் மொஹமட் இஸ்மாயில் அஹமட் கபீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
