மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத்துடன் இணைந்து தடயவியல் விசாரணைகள்!

United Nations Missing Persons Sri Lanka
By Rakesh Sep 28, 2025 06:18 PM GMT
Report

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வலிந்து காணாமல்போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.

இதன்போது, இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான தூதுக் குழு கலந்து கொண்டது.

தமிழர் பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

தமிழர் பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

சட்ட ரீதியான நடவடிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கையின் சட்ட ரீதியான நடவடிக்கைகளைப் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்களின் குழு பாராட்டியது.

எனினும், நீண்டகாலமாக நிலவும் வரலாற்று ரீதியான கவலைகள், சட்டச் சிக்கல்கள் மற்றும் நடைமுறைச் சவால்கள் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்பியது.

மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத்துடன் இணைந்து தடயவியல் விசாரணைகள்! | Forensic Investigations Into The Human Grave Issue

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரத்து 600 என்று இருந்தாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் தெரிவிப்பது குறித்துக் கவலை எழுப்பப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளுக்கு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் இல்லாதது குறித்தும், மாநாட்டின் வழிகாட்டல்களுக்கு இணங்காத வகைப்பாடுகள் பயன்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் ஒரு தொடர்ச்சியான குற்றம் என்ற தன்மையை குற்றவியல் நடைமுறைச் சட்டம் அல்லது புதிய சட்டம் அங்கீகரிக்கவில்லை என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

20 ஆண்டுகால காலாவதிச் சட்டம் எவ்வாறு நீதியைப் பாதிக்கும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது எப்படி என்று பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர் கார்மென் ரோசா வில்லா குயின்டானா கேள்வி எழுப்பினார்.

போர்க் குற்றங்கள்

புதிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டத்தில் "போர்க் குற்றங்கள்" மற்றும் "மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்" என்ற கருத்துக்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? இந்தக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளில் ஒரு மேலதிகாரியின் உத்தரவை ஒரு பாதுகாப்பு முறையாகக் கொண்டு, குற்றமிழைத்த அதிகாரிக்குப் பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? இந்தச் சட்டம் உத்தரவிட்ட அல்லது தெரிந்திருந்த மேலதிகாரிகளின் பொறுப்பைப் பற்றிப் பேசுகின்றதா? பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாரின் காப்பகங்களை அணுகுவதில் ஒத்துழைப்பு இல்லை.

மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத்துடன் இணைந்து தடயவியல் விசாரணைகள்! | Forensic Investigations Into The Human Grave Issue

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை வழங்க அவர்கள் மறுப்பதாகவும் அறிக்கைகள் குறித்து நிபுணர்கள் வினவினர். ஒத்துழைக்க மறுக்கும் படையினருக்கு என்ன தண்டனைகள் விதிக்கப்படுகின்ற என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரசால் அச்சுறுத்தப்படுவது அல்லது கண்காணிக்கப்படுவது குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது. பழிவாங்கலுக்கு அஞ்சாமல் புகார்களைச் சமர்ப்பிப்பதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும்? மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும், அதன் வருகைக்கான உரிமை சட்டத்தில் பொறிக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வழக்கு விசாரணையின்றி அதிகபட்சமாகத் தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கப்படும் காலம் எவ்வளவு? என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். ஆட்கடத்தலைத் தனித்த குற்றமாக ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால், புலம்பெயர்வு சூழலில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்து அரசு எவ்வாறு விசாரிக்கிறது? எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பயிற்சி உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

புதைகுழி

அத்துடன், மனித அல்லது பெயரிடப்படாத புதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை மரபணு தரவு வங்கியில் உள்ள தகவல்களுடன் பொருத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் உள்ளன.

2008 காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் மூன்று கடற்படைத் தளபதிகளின் ஈடுபாடு, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் குறித்து தரவுகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற முக்கிய வழக்குகள் குறித்து என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்.

மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத்துடன் இணைந்து தடயவியல் விசாரணைகள்! | Forensic Investigations Into The Human Grave Issue

இதற்குப் பதிலளித்த இலங்கைத் தூதுக்குழு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களைக் கையாளும் சட்ட அமைப்பு, நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றதாக அறிவித்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான 2018 சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதற்கு இணையாக இழப்பீட்டுச் சட்டம், காணாமல்போனோர் அலுவலகச் சட்டம் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் மேலதிகாரியின் உத்தரவை ஒரு குற்றவியல் பொறுப்பு விலக்காக ஏற்க முடியாது என்பதைச் சட்டம் தெளிவாக நிராகரித்துள்ளது.

மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகளின் தகவல் தொடர்பு நடைமுறைகள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் ஒரு வழக்கு அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்திடம் சுமார் 23,300 காணாமல்போனோர் வழக்குகள் உள்ளன.

குற்றச்சாட்டுகள்

இதில் 3 ஆயிரத்து 700 இராணுவ அதிகாரிகள் மற்றும் சுமார் 16 ஆயிரம் பொதுமக்கள் அடங்குவர். காணாமல்போனவர்களில் சுமார் 93 சதவீதமானோர் ஆண்கள் என்றும், 33 சதவீதமானோர் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இலங்கை தூதுக் குழு தெரிவித்தது.

கொலை அல்லது தேசத்துரோகக் குற்றங்களுக்கு குற்றவியல் நடைமுறைக் கோட்டில் காலாவதி வரம்பு இல்லை. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்ற சில குற்றங்களைத் தொடர்ச்சியான மீறல்கள் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேசத்துடன் இணைந்து தடயவியல் விசாரணைகள்! | Forensic Investigations Into The Human Grave Issue

பொலிஸாருக்கு எதிராகச் சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் இருந்தால், அந்த அதிகாரிகள் விசாரணைகளில் பங்கேற்கச் சட்டமா அதிபர் அனுமதி வழங்கமாட்டார் என்றும் அறிவித்துள்ளது.

2008 இல் கடற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. சட்டமா அதிபர் அனைத்து வழக்குகளையும் சுதந்திரமான முறையில் நடத்துவதாகவும் இலங்கை தூதுக் குழு தெரிவித்தது.

மனிதப் புதைகுழிகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நீதித்துறையின் மேற்பார்வையின் கீழ், சட்டத் தரங்களின்படி நடைபெறுகின்றன.

சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குடும்பங்கள் மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களைச் செயல்முறையில் சேர்ப்பதற்கும் அரசு செயற்படுவதாகவும் இலங்கை தூதுக் குழு அறிவித்தது.

புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US