இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..
இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வூட்லர் அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதை பொலிஸ் அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்டவிரோதமானது என்றும், இந்த வாடகை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸ் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் என அனைவரும் நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்தும்போது இலங்கையின் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்.

செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாமல் பல வெளிநாட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டதால், அவர்களுக்கு எதிராக பொலிஸ், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.