இலங்கையர்களினால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்
இலங்கையர்கள் தானமாக அளித்த கண்கள் மூலம் 3163 வெளிநாட்டினருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கண் தான சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நாட்டில் 7144 பேர் கண் தானம் செய்ததாக இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன் மாதரஆரச்சி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் 1,475 பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு தானமாக கிடைத்த கண்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண் தானம்
20,3000 பேர் கண்களை தானம் செய்யப் பதிவு செய்துள்ளதாக ஜகத் சமன் மாதரஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

தானமாக வழங்கப்பட்ட கண்களில் 1025 கண்கள் கண் அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை
வெளிநாட்டினருக்கு தானமாக வழங்கப்பட்ட கண்கள், ஏமன், எகிப்து, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பார்வையற்றோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இலங்கை கண் தான சங்கம் கடந்த ஆண்டு 2,300 இலவச கண்புரை (Cataract) அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக சமன் மாதரஆரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan