தவுலகல கடத்தல் விவகாரம்: மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனுக்கு பாராட்டு
கண்டி - தவுலகலவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை இலங்கை பொலிஸ் திணைக்களம் பாராட்டியுள்ளது.
துணிச்சலுடன் செயல்பட்ட 25 வயது முகமது இசதீன் அர்ஷத் அகமது என்ற நபருக்கே இவ்வாறு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
கண்டி - கம்பளை, தவுலகல பிரதேசத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி இன்று திங்கட்கிழமை (13) அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் நடவடிக்கை
இன்று காலை அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து கண்டிக்கு செல்வதற்காக காத்திருந்தபோதே மாணவியும் சந்தேக நபரும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (12) இரவு அம்பாறை பகுதியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடிக்க 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இக்குழுக்களின் தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடித்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        