மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.
மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை நிரப்பி இருக்க வேண்டும் என மலேசிய குடிவரவுத்துறை முகப்புத்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(01.12.2023) பதிவிட்டுள்ளது.
மின்னிலக்க வருகை அட்டை
மலேசிய நிரந்தர குடிவாசிகள், மலேசிய தானியக்க குடிவரவு முறை அட்டைதாரர்கள் மற்றும் குடிவரவு நடைமுறையை நிறைவேற்ற தேவையில்லாத சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக குடிவரவு துறையின் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பிரிவின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் தங்கள் பெயர், நாட்டுரிமை, கடவுச்சீட்டு விவரம் போன்ற அடிப்படை விவரங்களை மின்னிலக்க இணையப்பக்கத்தில் மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஜனவரியில், ஜோகூர் பாருவில் இருக்கும் இரண்டு தரைவழி சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூர் வாசிகள் இந்த மின் நுழைவு வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு மலேசியாவின் மின்னிலக்க வருகையை அட்டை முன்னரே நிரப்பி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
