விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல வெளிநாட்டவர் கைது
களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த 10 சீன நாட்டு ஆண்கள், ஒரு மலேசிய நாட்டு ஆண், இரண்டு சீன நாட்டுப் பெண்கள் மற்றும் ஒரு மலேசிய நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கைது
இவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த விடுதியில் பாரிய அளவிலான கணினி குற்றச்செயல்களை முன்னெடுப்பதற்கான பிரதான மத்திய நிலையம் ஒன்றின் ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தனியார் வணிகம் என்ற பெயரில் பதிவு செய்து இந்த மோசடியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri