கொழும்பின் பல பகுதிகளில் வெளிநாட்டவர் உட்பட நால்வர் கைது
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய சீராலியோன் நாட்டவர் ஒருவர் பொரளை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் கைது
இதன்போது சந்தேகநபருடன் 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் பல வெளிநாட்டு நாணயத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் 2400 மில்லிகிராம் கொக்கேய்னுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காலி பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலில் வைத்து 279 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் (19 மாத்திரைகள்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரினால் வெளியிடப்பட்ட தகவலுக்கமைய, மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொக்கேய்ன் மாத்திரைகள்
சந்தேகநபர் உருண்டைகளாக விழுங்கிய நிலையில் அவரது வயிற்றில் 672 கிராம் எடையுடைய 40 கொக்கேய்ன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் 52 வயதுடையவர் எனவும் மற்றைய நபர் 28 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
