யாழ் பல்கலைக்கழகம் மூன்றலில் வெளிநாட்டவர் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று(09.07.2026) சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த நபர் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் தொடர்பில் பேசியுள்ளார். அத்துடன், நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைந்து எண்ணற்ற நுண் பிளாஸ்டிக் (Microplastics) துகள்களாக மாறி கடல் மற்றும் நீர்நிலைகளில் கலப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அதேவேளை, உணவு, குடிநீர், உப்பு மற்றும் பிற வழிகள் மூலம் மனிதர்களின் உடலிலும் நுழையும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் மாசுப்பாடு
மேலும், நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரம் மற்றும் அதன் நீண்டகால விளைவுகள் குறித்து கல்வி நிறுவனங்களில் போதிய அளவில் கற்பிக்கப்படுவதில்லை என்றும், இதனால் மக்கள் தாமாகவே விழிப்புணர்வுடன் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, அவர் ஏந்தியிருந்த பதாகையில், “Always bring your own box, bag & bottle – Refuse Plastic” (எப்போதும் உங்களுடைய சொந்தப் பெட்டி, பை மற்றும் பாட்டிலைக் கொண்டு வாருங்கள் - பிளாஸ்டிக்கைத் தவிருங்கள்) என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு இயற்கையான உணவுகளை உண்ணுங்கள், மாமிசத்தை தவிருங்கள் எனக் கூறியதுடன், உலகில் 18 மில்லியன் பேர் பட்டினியால் வாழ்கின்றார்கள் என்றார்.

251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan