கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டுப் பிரஜை
வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 52 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை கடத்தியதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம்
சந்தேக நபர் இன்று அதிகாலை 1:00 மணிக்கு தாய்வாந்து ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது உணவுப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 5 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, அது நடிகர் பிரபு பெயரில் உள்ளது: ஜப்தி உத்தரவுக்கு ராம் குமார் பதில் News Lankasri

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக் Cineulagam
