மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது.
இந்த திருத்தம் ஊடாக மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார்.
புதிய கட்டணம்
குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை மின்சாரசபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு மீணடும் சுமையாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செலவுகளை ஈடு செய்ய
எனவே மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நட்டம் அடையாத வகையில் விலை நிர்ணயம் செய்யக்கூடிய விலைபபொறிமுறைமையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த முறையை பயன்படுத்தி விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
you may like this

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ.. Cineulagam
