வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத் தொகையில் அதிகரிப்பு
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இவ்வாறு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்த பண வரவு

இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 314.4 மில்லியன் டொலராக பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாத வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 355 மில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9,991 மில்லியன் டொலராகவும், இறக்குமதி செலவு 14,085 டொலராகவும் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri