கொழும்பில் வெளிநாட்டு பெண்ணின் மோசமான செயல் - பல பெண்கள் பாதிப்பு
இலங்கையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மடகாஸ்கர் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு மடகாஸ்கர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து மடகாஸ்கர் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்திய குறித்த பெண்ணை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர்
மடகாஸ்கர் பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்தரை மாதங்களாக விசா இன்றி இலங்கையில் தங்கியுள்ள சந்தேக நபர், மடகாஸ்கர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள்
சந்தே நபரான பெண் தன்னை மன்னித்து தனது நாட்டுக்கே அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
பொலிசார் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதால், விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்று நீதிபதி கூறினார்.
குற்றப்புலனாய்வு பிரிவை தொடர்பு கொண்ட நீதவான் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தூதரகங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.




