கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு பெண்ணின் வாக்குமூலம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் வாரத்தின் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் அடங்கிய பையை பிரேசிலில் உள்ள பெண் ஒருவர் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கு 1300 அமெரிக்க டொலர்கள் தருவதாக பையை கொடுத்த பெண் கூறியதாக கூறப்படுகிறது.
கடந்த 28ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 25 வயதுடைய வெளிநாட்டு பெண் 4 கிலோ 631 கிராம் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தி சந்தேக நபரை கைது செய்தனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக தன்னிடம் பையை ஒப்படைத்ததாக ஒப்புக்கொண்ட சந்தேக நபர், அந்த பையை இலங்கையில் உள்ள ஒருவரால் எடுத்துச் சென்று 1300 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
