இலங்கை பிரமுகர்களுக்கு விசா வழங்க மறுக்கும் நாடுகள்
இலங்கை நீதித்துறையில் அங்கம் வகிக்கும் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான விசாவை வழங்குவதில் கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மறுப்பை வெளியிட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
ஏற்கனவே இறுதிப் போர்க்களத்தில் செயற்பட்ட முன்னிலை இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வெளிநாடு செல்ல அனுமதியளிக்கும் விசாவை வழங்க அந்த நாடுகள் மறுதலித்திருக்கும் நிலையில், இப்போது நீதித்துறையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா வழங்குவதை சில நாடுகள் மறுதலித்திருப்பது அரச மேலிடத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நீதித்துறையின் சில செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க சில நாடுகள் தீர்மானித்துள்ளதாகவும் இது நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இப்படியான செயற்பாடுகள் இடம்பெறுவது சிறந்த சகுனங்கள் அல்ல.
இராணுவ அதிகாரிகளின் மீதான தடைகளுக்கு பிறகு இப்போது புதிய தடைகள் வந்துகொண்டிருக்கின்றன. நீதித்துறையின் உயர்மட்ட பிரமுகர்கள் பலரின் பிள்ளைகள் விண்ணப்பித்த கற்கைகளுக்கான விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அரசின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
courtesy : -தமிழன்-




