ராஜித சேனாரத்னவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்தில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
தற்காலிக தளர்வு
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக முன்வைக்கப்பட்ட மனு, இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடப்பட்டது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.