வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும்,இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan