திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சுற்றுலாத் துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்காவும் சான்று பகிர்கின்றன. இதனால் மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும்.
சுற்றுலாத்துறை விருத்தி
குறித்த மான் பூங்கா தொடக்கம் திருகோணமலை கோணேஸ்வரா கோயில் கோட்டை பகுதி, திருகோணமலை பஸ் நிலையம் என பல இடங்களிலும் குறித்த மான் இனங்கள் காணப்படுகிறது.
இதனை பாதுகாக்க பொலித்தீன் பை உள்ளிட்ட சூழலில் மான்கள் உண்ண பொருத்தமற்ற உணவு பண்டங்களை உண்ணாமல் அதிலிருந்து பாதுகாக்க சூழலை சுத்தமாக பேணப்பட வேண்டும்.

மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார் நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இது போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் விழிப்பூட்ட வேண்டும்.
இதன் மூலம் மேலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


