வெளிநாட்டிலிருந்து வந்த பெண்கள் உட்பட 3 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12.16 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்லும் போது 3 வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தொழிலதிபர்கள்
கைது செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் இந்திய தொழிலதிபர்களாகும்.
அவர்களில் ஒருவர் 42 வயதுடைய ஆண், ஏனைய இருவரும் 43 மற்றும் 22 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த பொதிகளில் 12 கிலோகிராம் 160 கிராம் குஷ் பாக்கெட்டுகளில் இருந்தது. அவை விமான நிலைய ஸ்கேனர்களால் கண்டுபிடிப்பதை தவிர்க்க கார்பன் பேப்பரால் மூடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா



