தென்னிலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டினர் குழுவை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
நாட்டில் மற்றுமொரு வெளிநாட்டினர் குழுவை இலங்கை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காலி துறைமுகம், மாகல்லே மற்றும் சம்போதி சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணைய வழி குற்றச்சாட்டு
குறித்த சந்தேக நபர்கள், 21 முதல் 47 வயதுக்குட்பட்ட இந்திய மற்றும் நேபாள நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கணினிகள் மற்றும் 32 தொலைபேசிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 198 வெளிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri