வவுனியா பல்கலைக்கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்
வவுனியா பல்கலைக்கழகத்தினை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்றையதினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வவுனியா பல்கலைக்கழகத்தினை இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, இப்பல்கலைக்கழகத்திற்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி. மங்களேஸ்வரன் தலைமையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
