தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு்ள்ளது.
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக அறிவித்திருந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 இச் சம்பவம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் இத்தாலியில் இருந்து தொலைபேசியின் ஊடாக அறிவித்திருந்த நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        