யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இன்றும், நாளையும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று இடம்பெற்ற வேளை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியதோடு பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது அவர் அங்கு வைத்து கருத்து தெரிவிக்கையில்,
'கல்வியலாளர்களுடன் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய பழைய நண்பர்கள் மற்றும் ஏனைய கல்வியலாளர்களை மீளக் காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
யாழ்ப்பாண மக்களுடன் நான் நீண்ட தொடர்பினைப் பேணி வருகின்றேன். நான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களின் போது யாழ். மக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன்.
நமது மத்திய வங்கியின் வடக்கு அலுவலகம் உட்பட ஏனைய வங்கியின் அலுவலங்கள் தொடர்பாக இங்கே பல நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். இன்றைய தினம் நான் வருகை தந்தபோது பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விடயத்தை தெரியப்படுத்தினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் 11000 மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார்கள் எனவும் அதில், 4500 பேர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தென் பகுதி, வட பகுதி மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பதன் காரணமாக சில புரிந்துணர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, இது மிகவும் முக்கியமான விடயமாகும்.
தற்போது எமது நாடானது முதலீட்டிற்கு முன்னுரிமையளித்து வருகின்றது. எமது அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை முன்னோக்கின் கொண்டுசென்று முதலீடுகளை அதிகரிப்பதாகும்.
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பாக நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம்.
அத்தோடு வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள், வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திலும் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய வசதி, வாய்ப்புகள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது போன்றே, ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், புரிந்துணர்வுகள் மூலமும் தெளிவுபடுத்தல் மூலமும் எமது செயற்பாடுகளை முன்னோக்கி செயற்படுத்துவோம்' என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளைய தினம் காலை நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கும், நயினாதீவு நாக விகாரைக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், மதியமளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் அதன் பின்னர் யாழ். ஆயர் இல்லத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
