கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு யுவதி கைது! வெளியான காரணம்
தென் அமெரிக்காவின் சூரினாம் நாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ கிராம் கொக்கேய்னை இலங்கை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சர்வதேச விமான நிலையம்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த 26 வயதான குறித்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து அவர் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் பிரேசிலில் இருந்து கத்தாருக்குப் பயணம் செய்து, பின்னர் கத்தார் ஏர்வேஸ் மூலமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
13 கோடி ரூபா

உணவுப் பொருட்கள் என பெயரிடப்பட்ட ஐந்து தகரப்பேணிகளுக்குள் அவர் எடுத்து வந்த கொக்கேய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கேய்னின் சந்தை மதிப்பு சுமார் 13 கோடி ரூபாவாகும். இதனையடுத்து குறித்த பெண், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam