அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைந்துள்ள அதே நேரம் அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ள கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் தொடக்கம் இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்குள் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தொகை 1063.13 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
மாதமொன்றுக்கு சுமார் 175 மில்லியன் டொலர்
கடந்த 2024ஆம் ஆண்டு 28574.65 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் கடன் தொகை நடப்பு ஆண்டின் ஜுன் மாதமளவில் 29634.78பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன்பிரகாரம் அரசாங்கத்தின் கடன்தொகையானது மாதமொன்றுக்கு 117.79 பில்லியன் ரூபா வீதம் அதிகரித்துள்ளது.
அதேபோன்று நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் 6531 மில்லியன் டொலர்களாக இருந்தஅந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 6178 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் மாதமொன்றுக்கு சுமார் 175 மில்லியன் டொலர்கள் அளவில் கிரமமாக அதிகரித்து வந்த அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது மாதம் தோறும் படிப்படியாக குறைந்து கொண்டு செல்வதாகவும் இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




