தென் கொரியாவுக்கு சென்றுள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்! கிடைத்துள்ள 80 ஆயிரம் விண்ணப்பங்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இருந்து தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளவர்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் இருந்து 2726 பேர் தென் கொரிய வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கொரிய மொழித் தேர்வுக்காகக் கிடைத்துள்ள விண்ணப்பங்கள்
இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வேலை ஒப்பந்தங்களின்படி, 2694 இளைஞர்களும் 32 யுவதிகளும் உற்பத்தி, கடற்றொழில் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் கொரிய வேலைகளுக்கு சுமார் 8000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அந்நாட்டு மனிதவளத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிலவரப்படி தற்போது நடைபெற்றுவரும் கொரிய மொழி தேர்வுக்கு 84,886 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
you my like this video

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
