புலம்பெயர் தொழிலாளர் குடும்ப நலனுக்காக கோடிகளில் செலவிடப்பட்டுள்ள பணம் - வெளியாகியுள்ள தகவல்
நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரிச் செயற்பாடுகளுக்காக 9 கோடி 62 இலட்சம் ரூபா (96.2 மில்லியன் ரூபா) செலவிடப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்பணியகம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 5938 பயனாளிகளுக்காக இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது.
நலன்புரித் திட்டங்கள்
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்துக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பணியகத்தால் மேலும் பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றுள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri