நுவரெலியாவில் திறந்துவைக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மத்திய நிலையம்
மனுசக்தி எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்று (07.01.2024) குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்துக்கொண்டு பணியகத்தை திறந்து வைத்தார்.
தொழிலாளர்களின் பிரச்சினை
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஜனவரி மாதம் இறுதிக்குள் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் உயர்வுக்கு தீர்வு கிட்டும்.
நம் நாட்டுற்கு பொருளாதார வளர்ச்சிக்குபெரும் பங்காற்றிவரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை என்னால் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.
அந்தவகையில் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு
இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி திகதி குறித்துள்ளார்.
தன்னை அழைத்து பேசியும் உள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பாக சகல தரப்புகளும் கலந்துரையாடவுள்ளதுடன், பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகையால் இம்மாத இறுதிக்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்கும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











