சூட்சுமமான முறையில் திருட்டு : சிசிரிவியில் சிக்கிய வெளிநாட்டு தம்பதி
கணேமுல்லையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் காசாளரிடமிருந்து சூட்சுமமான முறையில் பணத்தை திருடிச் சென்றுள்ள வெளிநாட்டு தம்பதிகள் சிசிரிவி காட்சியில் சிக்கியுள்ளனர்.
குறித்த சிசிரிவி காட்சியில், வெளிநாட்டு தம்பதியினர், இலங்கை ரூபாய் தாள்கள் குறித்து வர்த்த நிலைய காசாளருடன் உரையாடுவதைக் காட்டுகிறது.
காசாளருடன் உரையாடல்
இதன்போது, சந்தேக நபர்கள், காசாளருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது, பணப் பெட்டிக்குள் கையை நீட்டி, குறைந்த ரூபாய் தாள்களின் கீழ் 5000 தாள்களை இரகசியமாக அடுக்கி வைக்கின்றனர்.
பின்னர் காசாளருக்கு தெரியாமல் அவற்றைப் பையில் வைத்துக் கொள்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, கடையின் உரிமையாளர் அன்றைய கணக்குகளைச் செய்யும்போது கிட்டத்தட்ட ரூ.40,000 பணம் குறைவாக இருப்பதை கணிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிசிரிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த வெளிநாட்டு தம்பதியின் இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
