இலங்கையில் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு கட்டண அதிகரிப்பு! வெளியான முழு விபரம்
இலங்கையில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிவிவகார அமைச்சின் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணங்கள் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய, வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப்பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணிகள் தொடர்பான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
கட்டண அதிகரிப்பு விபரம்
இதன்படி, பரீட்சை சான்றிதழை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 500 ரூபாவிலிருந்து 800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 1,500 ரூபாவிலிருந்து ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மின்னணு ஆவண சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிறப்புச் சான்றிதழ் பதிவு கட்டணம், இறப்புப் பதிவுக் கட்டணம், திருமணப் பதிவுக் கட்டணம், ஆவணங்களின் சட்டப்பூர்வமான தன்மையை நிரூபிக்கும் சான்றிதழ்களுக்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
