வெளிநாட்டில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் இலங்கை பெண்கள்
வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களை அடைத்து வைத்து சித்திவதைக்கு உட்படுத்தப்படும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
செல்ல கதிர்காமம், கொஹோம்பதிகான பகுதியைச் சேர்ந்த எச்.எம்.தில்ருக்ஷி என்ற பெண் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போனதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர் அனுப்பிய காணொளி ஒன்று ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.
பணமும் வழங்குவதில்லை
“ஒரு அறையில் சுமார் 20 முதல் 30 பேர் வரையிலானோரை அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு கூட வழங்கப்படுவதில்லை.
தினமும் அவர்களை சென்று வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்து 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார்கள். பணம் வழங்குவதில்லை. முகவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
விற்கப்படும் பெண்கள்
இலங்கை பெண்களை வரிசையில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். 19,500 ரூபாய்க்கு இரண்டாம் நிலை பெண்கள் எனவும், 30,000 ரூபாய்க்கு புதியவர்கள் எனவும் மதிப்பிடுகிறார்கள். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 4 பிள்ளைகளின் தாயார் என தெரியவருகிறது. தில்ருக்ஷியின் கணவர் சமில்சிறி நந்தா, தனது மனைவியை அழைத்து வர தலையிடுமாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |