தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள்: பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல்
நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு
போதைப் பொருள் குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்படுத்த பொலிஸாரும், படையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையானது அரசியல் தலையீடுகள் இல்லாத வகையில் மேற்கொள்ளப்படு வருகிறது.
ஒரே வருடத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட முடியாது.
எனினும் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழு செயற்பாடு
தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் அதகிரித்துள்ளது.
இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
மேலும், மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் ஒருப்போதும், ஏற்றுக்கொள்ள முடியாது.
பொறுப்புள்ள அரசு என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசு இடமளிக்காது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாதாள உலகக்குழுக்களுக்கிடையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு
தற்போது பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன. குறிப்பாக போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் மோதல்களே இவ்வாறு அவர்கள் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல்களில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைகின்றது.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்குக் கத்தோலிக்க திருச்சபையும் ஒத்துழைப்பு வழங்க முடியும்." - என்றும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
