தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசிடம் பரிந்துரைக்கக் கோரி அங்கஜனிடம் மகஜர் கையளிப்பு

Politics
By Independent Writer Jan 27, 2021 08:37 PM GMT
Report

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுமத் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையில், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் சார்பாகக் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொது மக்களான நாம், எமது கோரிக்கையை இத்தாழ் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இம்மனுவின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்குப் பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரின் துயரத்தையும் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையையும் தாங்கள் அறிவீர்கள் என நாம் நம்புகிறோம்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைகளில் பல ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் தமது வாழ்வின் பெரும்பகுதியைப் பலவருடங்களாக இரும்புக் கம்பிகளின் பின்னால் கழித்து வயது மூப்பை அடைந்துள்ளதோடு நோயாளிகளாயும் ஆகியுள்ளனர்.

தற்போது, 147 தமிழ் அரசியல் கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் 69 பேருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

61 பேருக்கு வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரிமான்ட் இல் இருப்பவர்களில் ஏழு பேர் பெண்களாவர். இப்பெண்களில் ஒருவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரிமான்ட் சிறையில் இருக்கிறார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேர் இன்னும் நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பதின்ம வயதுச் சிறுவர்களும் அடங்குவர். தற்போது சிறைகளுக்குள் கொரோனா பெருந்தொற்று பரவிவருகிறது. 14 தமிழ் அரசியல் கைதிகள் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்களான நாம், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைகொண்டுள்ளோம். எனவே, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் அனைவரையும் விடுவிக்கப் பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம்.

ஏனெனில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பல வருடங்களாகச் சிறைகளில் அடைபட்டு வெளியுலகத்தைக் காணாதவர்களாக இருப்பதோடு நீண்டகால சிறையிருப்பின் காரணமாக அவர்களின் உடல் உள ஆரோக்கியம் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்ந்தும் அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருப்பார்களானால் அவர்களின் ஆயுட்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும். எஸ். மகேஸ்வரன் எனும் தமிழ் அரசியல் கைதி 1993இல் தனது 17வது வயதில் கைது செய்யப்பட்டார்.

26 வருடங்களைச் சிறையில் கழித்திருந்த நிலையில் இவ்வருடம் (2021) தை மாதம் முதலாம் திகதி கடும் சுகயீனம் காரணமாகத் தனது 45வது வயதில் காலமானார்.

அடுத்து, ரிமானட் சிறைகளில் ஏழு தமிழ் பெண் அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தனது ஒன்றறை வயதுக் குழந்தையுடன் சிறையில் இருக்கிறார்.

எனவே,இப் பெண்களின் நிலையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குத் தாமதமின்றி பிணை வழங்குமாறு நாம் அரசைக் கோருகிறோம். அத்தோடு, 14 தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களினதும் ரிமானட் சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளினதும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்களின் நீதி விசாரணையைத்துரிதப்படுத்தி அவர்களுக்குப் பிணை வழங்குமாறு கோருகிறோம்.

இவர்களைத் தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் நீதிமன்றில் ஆஜராக்குமாறு நாம் உரிய அதிகாரிகளைக் கோருவதுடன் அவர்களைப் பிணையில் விடுதலைசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோருகிறோம்.

எமது இந்த கோரிக்கைக்கு தாங்கள் உரிய முக்கியத்துவம் அளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசுக்குப் பரிந்துரைப்பீர்கள் என நம்புகிறோம் எனக் குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US