சீரற்ற காலநிலையினால் சாதாரண தரப் பரீட்சைக்கு பாதிப்பா!
சீரற்ற காலநிலையினால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு இடையூறு ஏற்பட்டதாக நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை சாதாரணதரப் பரீட்சைகள் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த நிலைமையினால் பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடிாயத நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி தெரிவித்துள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam