பிணையில் செல்ல அனுமதிக்க கோரி அபேசேகரவும், மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு
குற்றவியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத்மெண்டிஸ் ஆகியோர் தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
இதன்படி 2021 பெப்ரவரி 23ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்னாள் பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் வழக்கில் பொய்யான சாட்சிகளை முன்னிறுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அபேசேகரவும், மெண்டிஸும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கம்பஹா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக்குரிய மனுக்களை கம்பஹா மேல் நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து கம்பஹா மேல் நீதிமன்ற தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தியே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



