இரவு நேர ஊரடங்கு வௌவால்களுக்கு மட்டுமே! வீதிக்கு இறங்கும் நிலையேற்படுமென எச்சரிக்கை
இலங்கையில், இரவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு, பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக அமையாது என்று அரச செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதாரத்துறையின் தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் முடக்கலை அமுல்படுத்தும் படி கட்டாயப்படுத்தி வீதிகளில் இறங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர்,
இன்னும் இரண்டு நாட்களுக்குப் பின்னர். அறிவியல் முடக்கலை அமுல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஏற்கனவே விவாதித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அரசாங்கம் விதித்த ஊரடங்குச் சட்டம் பயனளிக்காது. அந்த நேரத்தில் யாரும் நடமாடுவதில்லை.
இந்த ஊரடங்கு இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் வெளவால்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது அனைத்து மாகாணங்களிலும் கோவிட் தொற்றுநோய் பரவி வருவதால், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக இல்லை என்று சமன் ரத்னப்ரிய கூறியுள்ளார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஒரு வாரத்திற்கு அறிவியல் முடக்கலை விதிப்பதும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்கொண்டதைப் போன்று, அனைத்து தொற்றாளர்களையும் அடையாளம் காண்பதும் மட்டுமே என்று ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
