தரக்குறைவான எரிபொருள் சந்தைக்கு விநியோகம்: உண்மையை வெளிப்படுத்திய சஜித்
தரக்குறைவான எரிபொருள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சரியான தகவல்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (16) உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு தொடர்பாக தான் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய நிலையிலும் குறித்த எரிபொருளானது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி
இந்த தரக்குறைவான எரிபொருள் தூய எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும், இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் வெளிப்படுத்திய போது, பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி வெளிப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்தியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவலின் அடிப்படையிலேயே தாம் இந்த தகவலை அன்று சமர்ப்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam