உள்ளூராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து ஏன் வழங்கவில்லை? - தவிசாளர் நிரோஷ் கேள்வி
உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கோவிட் 19 தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர்.
அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் படி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியபோது அரசின் அறிவிப்பில் உள்ளூராட்சி மன்ற சுகாதாரத் தொழிலாளிகளுக்குத் தொற்றுத் தடுப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படவில்லை.
ஆகவே வழங்கப்படவில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் பதிலளித்துள்ளார். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே தவிசாளரினால் இந்த வினா எழுப்பப்பட்டது.
இந்த வினா எழுப்பப்பட்ட போது, தவிசாளரின் கேள்வியை மறுத்து இவ்வாறான கேள்விகளைத் தொடுத்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ், தவிசாளரின் கேள்வியை மறுத்துள்ளார்.
எனினும் குறுக்கிட்டுப்பேசிய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்றங்களில் சுகாதாரத் தொழிலாளிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கோவிட் 19 தொற்று அபாயமுள்ள பல பணிகளை நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் கழிவுகளை அகற்றுகின்றனர்.
கோவிட் 19 தொற்றாளர் வைத்தியசாலையான கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் கூட பல சேவைகளைச் செய்கின்றனர். கோவிட் 19 தொற்று சிகிச்சை நிலைய மலசலக் கூடக் குழிகள் நிரம்பினால் கூட பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளிகளே அகற்றியுள்ளனர்.
தொற்றாளர்கள் நடமாடிய சந்தேகத்திற்கு இடமான பகுதிகளைத் தொற்று நீக்கம் செய்கின்றனர்.
ஆனால் அப்படியாகப் பணியாற்றும் தொழிலாளர்களைத் தொற்று மருந்தில் புறந்தள்ளுவது சரியான சுகாதார அணுகுமுறையல்ல. சகல சபைகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மருந்து ஏற்றப்படவேண்டும்.
ஒரு சுகாதாரத் தொழிலாளி தொற்று சந்தேக இடத்தில் தற்செயலாகத் தொற்றை வாங்குவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. வீதிகளில் தவறான முறையில் கழற்றி வீசப்படும் முகக் கவசங்களைக்கூட அகற்றும் பணியில் சுகாதாரத் தொழிலாளிகளே ஈடுபடுகின்றனர் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார பணிப்பாளர், இலங்கைக்கு உலக சுகாதார தாபனம் மருந்துகளைக் கையளிக்கும் போது வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தமக்கு பணிக்கவில்லை என்றும் மருந்தினை பகிர்வது தமது முடிவு அல்ல அது அரசின் கொள்கை எனவும் பதிலளித்துள்ளார்.
சாதாரணமாகச் சுகாதாரத் திணைக்களங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கே கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கோவிட் 19 தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர். அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் படி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியபோது அரசின் அறிவிப்பில் உள்ளூராட்சி மன்ற சுகாதாரத் தொழிலாளிகளுக்குத் தொற்றுத் தடுப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படவில்லை.
ஆகவே வழங்கப்படவில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் பதிலளித்துள்ளார். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே தவிசாளரினால் இந்த வினா எழுப்பப்பட்டது.
இந்த வினா எழுப்பப்பட்ட போது, தவிசாளரின் கேள்வியை மறுத்து இவ்வாறான கேள்விகளைத் தொடுத்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ், தவிசாளரின் கேள்வியை மறுத்துள்ளார். எனினும் குறுக்கிட்டுப்பேசிய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்றங்களில் சுகாதாரத் தொழிலாளிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கோவிட் 19 தொற்று அபாயமுள்ள பல பணிகளை நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் கழிவுகளை அகற்றுகின்றனர். கோவிட் 19 தொற்றாளர் வைத்தியசாலையான கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் கூட பல சேவைகளைச் செய்கின்றனர்.
கோவிட் 19 தொற்று சிகிச்சை நிலைய மலசலக் கூடக் குழிகள் நிரம்பினால் கூட பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளிகளே அகற்றியுள்ளனர். தொற்றாளர்கள் நடமாடிய சந்தேகத்திற்கு இடமான பகுதிகளைத் தொற்று நீக்கம் செய்கின்றனர்.
ஆனால் அப்படியாகப் பணியாற்றும் தொழிலாளர்களைத் தொற்று மருந்தில் புறந்தள்ளுவது சரியான சுகாதார அணுகுமுறையல்ல. சகல சபைகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மருந்து ஏற்றப்படவேண்டும்.
ஒரு சுகாதாரத் தொழிலாளி தொற்று சந்தேக இடத்தில் தற்செயலாகத் தொற்றை வாங்குவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. வீதிகளில் தவறான முறையில் கழற்றி வீசப்படும் முகக் கவசங்களைக்கூட அகற்றும் பணியில் சுகாதாரத் தொழிலாளிகளே ஈடுபடுகின்றனர் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார பணிப்பாளர், இலங்கைக்கு உலக சுகாதார தாபனம் மருந்துகளைக் கையளிக்கும் போது வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தமக்கு பணிக்கவில்லை என்றும் மருந்தினை பகிர்வது தமது முடிவு அல்ல அது அரசின் கொள்கை எனவும் பதிலளித்துள்ளார்.
சாதாரணமாகச் சுகாதாரத் திணைக்களங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கே கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri