திருகோணமலையில் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை
மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதற்கென போதியளவு டீசல் வழங்கப்படுவதில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்துயுள்ளனர்.
திருகோணமலை எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தும் தமது ஜீவனோபாய தொழிலான கடற்றொழிலினை முன்னெடுத்து செல்ல முடியாமல் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
இன்று (19) காலை டீசல் பெறுவதற்றாக நீண்ட வரிசையில் காத்திருந்து கேன்களில் டீசல் வழங்கமுடியாது என எரிபொருள் நிலைய ஊழியர்களினால் தடைவிதித்ததையடுத்து அங்கு சற்று அமைதியின்மை ஏற்பட்டது
பின்னர் ஒருவருக்கு 2000 ரூபாய்க்கு மாத்திரம் டீசல் வழங்கப்பட்டதாகவும் அவ்வாறு பெறப்பட்ட டீசல் மூலம் கடலில் எவ்வளவு தூரம் செண்டு தமது தொழிலை செய்யமுடியும் என மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
தமது படகுகளின் அனுமதிப்பத்திரத்தினை காண்பித்தும் தமக்கு போதுமான டீசல் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்
மேலும் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் தாங்கள் நிவாரணம் கேட்கவில்லை எனவும் தமது ஜீவனோபாய தொழிலை முன்னெடுத்து செய்ய உரிய முறைகள் எரிபொருளினை வழங்க அல்லது படகின் அனுமதி பத்திரத்திட்க்கு அமைவாக மீன்பிடி துறைமுகங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலாவது டீசல் பெற்றுத்தர அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு