இலங்கையில் கொரோனா மரணங்களுக்கு கோட்டாபயவும் சவேந்திரவுமே முழுப்பொறுப்பு

Corona virus Covid 19 Shavendra silva Gotabhaya rajapaksha
By Rakesh Aug 15, 2021 08:42 AM GMT
Report

இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையைக் கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு பலவீனப்பட்டுள்ள நிலையில் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்பதை சுகாதார, வைத்திய நிபுணர்களே வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விடயத்தைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களும் அவர்கள் என்ற காரணத்தால் அவர்களின் கருத்துக்களுக்கு அனைவரும் செவிமடுக்க வேண்டும். நாட்டில் தற்போது கொரோனா மரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நாளாந்தம் 150 இற்கும் அதிக மரணங்கள் பதிவாகிக்கொண்டுள்ளன. இந்தத் தரவுகள் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

சுகாதார பணியகம் கூறும் தரவுகளை விடவும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்று பொதுச் சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். எனவே, நிலைமை மோசமாக உள்ளதென்பது தற்போது சகலருக்கும் தெரிந்த ஒன்றே.

இதன்போது சுகாதாரத் தரப்பின் கருத்துக்களுக்கு முழுமையாகச் செவி மடுத்து அவர்களின் யோசனைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர இராணுவம் கூறுவதைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் கொரோனா செயலணியின் மூலமாக இராணுவத் தளபதியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தாலே தற்போது நாடு பாரிய அச்சுறுத்தல் நிலையை அடைந்துள்ளது.

அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதாரத் தரப்பின் கோரிக்கைக்கு செவிமடுக்காது தனது தனிப்பட்ட அரசியல் சுயநலன்களைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிருடன் விளையாடிக்கொண்டுள்ளார்" - என்றார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US