தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவு அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பதக்கத்தை வென்றுள்ளது.
இப்போட்டி இன்று (09.10.2023) காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மஹாஜன கல்லூரி முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
20 வயது பிரிவு அணி இரண்டாம் இடம்
இதேவேளை 20 வயது பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின்போது இரண்டு அணிகளும் மிகவும் உற்சாகமாக விளையாடிய போதும் கோல்கள் எவற்றையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பொலன்னறுவை பென்டிவெவா அணியினர் இரண்டு கோல்களை அடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.











ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri