வடக்கு - கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்: தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் (Photos)
புதிய இணைப்பு
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு - கிழக்கு மாகணங்களில் கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் கதவடைப்பு போராட்டம் தொடர்பான கூட்டம் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (09.10.2023) மாலை நடைபெற்றது.
அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்ளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலிலேயே, எதிர்வரும் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும் - கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல்
கதவடைப்பு போராட்டம் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும், தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல், யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று (09.10.2023) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்: கஜிந்தன்








Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
