க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு: கல்வி அமைச்சர் தகவல்
இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை
பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
