கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்!
ஜேர்மன் நகரமொன்றில் கால்பந்து பயிற்சியளித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பவேரியாவிலுள்ள வெயில்ஹெய்ம் (Weilheim?) நகரில் ஏராளமான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய கால்பந்து பயிற்றுவிப்பாளர் கார்ஸ்டன் லிங்கே (வயது 52) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் தொடர்பான சில உளவுத்துறை இரகசியங்களை ரஷ்யாவுக்கு அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கார்ஸ்டன் லிங்கே அருமையான ஒரு பயிற்சியாளர் எனவும் அவர் அவ்வப்போது காணாமல் போய்விடுவதாகவும் சக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரட்டை வேடம்
தனது ஊரில் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருந்த Carsten, ஜேர்மன் உளவுத்துறையில் பெரிய பொறுப்பு ஒன்றை வகிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஜேர்மனியின் உளவுத்துறையில் பணியாற்றிய அவர், வெளி உலகுக்கு ஒரு கால்பந்து பயிற்சியாளராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். அந்த வேலையை நன்றாகவும் செய்துள்ளார்.
மேலும் இவர் அடிக்கடி பார்பிக்யூ விருந்துகள் வைத்துள்ளார். ஒரு கட்டத்தில், விருந்துக்கு வந்த Arthur E என்பவரை சந்தித்துள்ளார்.

இருவரும் முன்னாள் போர் வீரர்கள் என்பதால், விரைவில் நண்பர்களாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் Arthur என்ற முன்னாள் போர் வீரர் மூலமாகத்தான் Carsten ரஷ்யாவுக்கு இரகசிய செய்திகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜேர்மன் உளவுத்துறையில் பெரிய பொறுப்பு வகித்த ஒருவரே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் விசாரணை

இந்நிலையில், ரஷ்யாவுக்காக உளவு பார்க்கும் எண்ணத்தை உருவாக்கியது யார், Arthur ரஷ்யாவுக்கு உளவு பார்ப்பதற்காகவே Carstenஐ பார்பிக்யூ விருந்தில் சந்திக்க அனுப்பப்பட்டாரா? அல்லது, Carsten உளவு பார்ப்பதற்காக Arthurஐ பயன்படுத்திக்கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை பொறுப்பான பதவியிலிருந்துகொண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி, அந்த எண்ணத்தை உருவாக்கியது யார், ஜேர்மன் உளவுத்துறையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது Carsten மட்டுமா அல்லது வேறு யாராவது இருக்கிறார்களா, என பல கேள்விகளுக்கான பதில்களை ஜேர்மன் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam