உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புடினின் சர்ச்சைக்குரிய புகைப்படம்
வரலாற்று நிகழ்வொன்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் பயணப்பெட்டியுடன் (Suitcase) காணப்பட்ட காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான battle of Stalingrad போரின் வெற்றி நினைவு நாள் விழாவில் ரஷ்ய அதிபர் புடின் மலர்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது அவருடனிருந்த பாதுகாவலர்கள் இருவர் தங்கள் கைகளில் பயணப்பெட்டியை வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக் கவசம்
குறிப்பாக துப்பாக்கிச்சூடு நடத்தினால், புடினை பாதுகாப்பதற்காக புடினின் பாதுகாவலர் கையில் மடித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கவசம் உள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் அணு ஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் (launch button) அடங்கிய பயணப்பெட்டியை மற்றைய பாதுகாவலர் வைத்திருப்பர் என கூறப்படுகின்றது.
இதேவேளை, அணு ஆயுத பயணப்பெட்டியுடன் புடின் காணப்படும் காட்சியும் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.