நியாயத்தை கோரி அலரி மாளிகைக்கு எதிரில் உணவு தவிர்ப்பு போராட்டம் (Live)
இலங்கையில் அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு கோரி கொழும்பு கொள்ளுப்பிட்டிய அலரி மாளிகைக்கு எதிரில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அலரி மாளிகைக்கு எதிரில் இளைஞர்கள் சிலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் “றம்புக்கணயில் அண்மையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டனர். அதேபோல் இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எக்னேலிகொட, லசந்த விக்ரமதுங்க, தாஜூடீன் போன்றவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த அரசாங்கம் இவ்வாறு அப்பாவி மக்களை கொலை செய்த அரசாங்கம். அந்த மிலேச்ச செயல்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவே நாங்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்”என தெரிவித்துள்ளார்.










