உணவுப் பாதுகாப்பு விதிமீறல் : கொழும்பில் சீன உணவகங்கள் மீது அபராதம்
கொழும்பில் இயங்கி வரும் இரண்டு சீன உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றுக்கு உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பில் மொத்தம் 4,44,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த அபராதங்களை விதித்துள்ளது.
மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக
இரண்டு சீன உணவகங்களுக்கு, காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் உரிய லேபிள்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட 120 குற்றச்சாட்டுகளுக்காக 3,60,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரநிலைகளுக்கு இணங்காத ஐஸ்கிரீமை விற்பனை செய்தமை உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை, நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 84,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக மொத்தம் 148 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த உணவகங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.