பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை
பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக அந்நாட்டின் சில்லறை வர்த்தக அமைப்பான 'BRC' எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே பிரித்தானிய மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகளின் அதிகரிப்பால் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் விலை 4.2 சதவீதத்தில் அதிகரிக்க இருப்பதால், மக்களின் சுமை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
கடந்த ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் விளைவே இந்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு என 'BRC' சுட்டிக்காட்டியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் படி, பணி வழங்குவோர் தேசிய காப்பீடு அதிகரிப்பு, தேசிய வாழ்வாதார ஊதியம் மற்றும் பேக்கிங் வரிகள் என, 2025இல் சில்லறை வர்த்தகர்களுக்கு சுமார் 7 பில்லியன் பவுண்டுகள் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில், உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam