குறைவடையும் கோழி இறைச்சியின் விலை
மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1,200 ரூபாவாக குறைக்க முடியும் என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாவு வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன் நுகர்வோருக்கு
இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri