10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை குறைப்பு! இன்று முதல் நடைமுறை
10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய விலைகள்
1. பாசிப் பயறு : 325 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,225)
2. காய்ந்த மிளகாய் : 60 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,290 )
3. சிவப்பு பருப்பு : 15 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 299 )
4. சிவப்பு நாட்டு அரிசி : 15 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )
5. நெத்தலி : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,140 )
6. கோதுமை மா : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )
7. சோயா மீட் : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 650 )
8. சிவப்பு அரிசி : 06 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 139 )
9. கடலை : 05 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 540 )
10. வெள்ளை சீனி : 04 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 225 )
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |